புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆராய மத்திய குழு விரைவில் தமிழகம் வருகை

புரெவி புயல் பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை இணையமைச்சர் தலைமையிலான குழு, புயல் பாதிப்பை மதிப்பிட்டு உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்பிக்க உள்ளது. மாவட்டந்தோறும் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version