தஞ்சை மாவட்டத்தில், புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.
புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் அசுதேஷ் அக்னிஹோத்ரி தலைமையில், 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தனர். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே, கண்ணன் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர். நெல், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட 21 ஆயிரத்து 576 ஏக்கர் பயிர்களும், 11 ஆயிரத்து 65 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வேளாண் அதிகாரிகள் தெரிவித்த தகவலை குறித்துக் கொண்ட அதிகாரிகள், உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனர்.