ஊரடங்கிற்கு மக்கள் ஒத்தழைப்பு தர மத்திய-மாநில அரசுகள் வேண்டுகோள்

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறித்து கடந்த வியாழன் அன்று உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் இருக்க மக்களின் ஒத்தழைப்பு மிகவும் தேவைப்படுவதாக கூறினார். அதற்கு முன்னோட்டமாக மக்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, இன்று இரவு 9 மணி வரை, நாடு முழுவதும் “மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் அறிவுரைக்கு ஏற்ப அனைத்து மாநில முதல்வர்களும் “மக்கள் ஊரடங்கு” முறைக்கு மக்கள் ஒத்தழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version