பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் பதற்றமான வாக்கு சாவடிகளில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் பதிவேற்றும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, சீலிடபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கபட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கபட்டுள்ளது என்றும் பதற்றமான 79 வாக்கு சாவடிகளில் கூடுதலாக மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்கபடும் என்று கூறினார்.