2025ம் ஆண்டுக்குள் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியில் உலகத்தில் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் பொன்விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, தினசரி வாழ்க்கையில் அங்கமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், நமது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அதனை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.