தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு விழா

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில், 105 பெண்கள், ஆயிரத்து 100 துணை உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் கேடையாங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் பாதுகாப்புப்படையின் பணி மகத்தானது என கூறினார். மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலைய பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

Exit mobile version