கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் 2-வது நாளாக இன்று ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக இன்றும் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட உள்ளனர்.

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சேத விவரங்களை மதிப்பிட்டனர். இன்று காலை 7 மணிக்கு தஞ்சையில் மீண்டும் ஆய்வை தொடர்கின்றனர். அங்கு பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அவர்கள் புயல் சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

பின்னர் மாலை 3 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட உள்ளனர். திங்கள்கிழமை நாகை மற்றும் வேதாரண்யத்தை பார்வையிடும் இவர்கள், இறுதியாக காரைக்கால் மற்றும் புதுவையில் ஆய்வு பணிகளை நிறைவு செய்ய உள்ளனர்.

Exit mobile version