டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அளவீடு 401 என்ற அளவை எட்டி உள்ளது. சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் காற்று தர கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ‘சபார்’ விடுத்துள்ள அறிக்கையில், வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறும், அடிக்கடி வீட்டை ஈரத்துணியினால் துடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பொது மக்களுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post