தீவிரவாத தாக்குதல் குறித்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களிடம் மத்திய அரசு விளக்கமளித்தது. டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இஸ்ரேல் நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர். ஜப்பான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களும் கலந்து கொண்டனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கினர்.
உலகளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, வர்த்தக ரீதியாக பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய ரத்து செய்துள்ளது.