காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அளிக்கபட்டு வந்த சிறப்பு குழுவின் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை எஸ்.பி.ஜி. என்ற சிறப்பு பாதுகாப்பு குழு கவனித்து வருகிறது. அந்த வகையில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இனி பிரதமர் மற்றும் அவரது குடும்பத்திற்கு மட்டுமே , எஸ்.பி.ஜி., பாதுகாப்பு தரப்படும் எனவும் முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு கிடையாது என, சட்டதிருத்தம் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த சட்ட திருத்தத்தை தாக்கல் செய்ய, பா.ஜ.க அரசு முடிவெடுத்துள்ளது. இது நிறைவேறினால், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு திரும்ப பெறப்படும்.
Discussion about this post