11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து நன்றி கூறிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதற்கான பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளதாக, தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் தொடர் முயற்சியின் காரணமாக ஒரே ஆண்டில் , 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை பெறப்பட்டிருப்பதாக கூறினார். கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருவதற்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும்
மாநில அரசு சார்பாக 40 சதவீதமும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.