ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு

கடனில் சிக்கி தவித்து வரும் பொதுத்துறை நிறுவனமான, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஏஐ.எஸ்.ஏ.டி.எஸ் நிறுவனத்தின், 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

Exit mobile version