தனியாக வசிக்கும் முதியோருக்காக பராமரிப்பு இல்லங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் குறித்து நேற்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், முதியோருக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு நடத்தும் தொழிற்சாலை இந்த உபகரணங்களை தயாரிப்பதாகவும் கூறினார். தனியாக வசிக்கும் முதியோர்களை கவனிக்கும் விதமாக பகல்நேர பராமரிப்பு இல்லம் அமைக்கப்படும் என தெரிவித்த அவர், இதுதொடர்பாக அரசு புதிய திட்டம் கொண்டு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.