கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ள நிலையில், மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை தற்போது காணலாம்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கேராளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. முழுமையாக குணமடைந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 பேர் ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேபோல் தெலங்கானாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் குணமடைந்துள்ளார். லடாக்கில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, அரியானா, ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.