அதிகளவில் மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும், நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும் அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இத்திட்டத்தை 40 லட்சம் மக்கள் வசிக்கக் கூடிய நகரங்கள் மற்றும் பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் நடைமுறைப்படுத்த, எரிசக்தித் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.