ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்க, ரயில்வே வாரியம் இன்று டெல்லியில் கூடுகிறது.
இந்தியாவில் ரயில்வே வாரியம் முழுவதும் மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. இந்தியாவின் ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இருந்து வந்த நிலையில், நகரம் முழுவதும் முதற்கட்டமாக 150 தனியார் ரயில்களை இயக்க, அதற்கான வழித்தடங்களை அமைத்து வருகிறது.
இந்த நிலையில், ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்க, ரயில்வே வாரியம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மண்டல உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில்வே வாரியத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என, ரயில்வே தொழிற் சங்கங்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.