மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ததற்காக 5 ஆயிரத்து 245 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய அரசு துறைகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை விளம்பரப்படுத்தியதாக சுட்டிக் காட்டிய ராஜ்யவர்தன் சிங் ரதோர், இதற்காக 2014ஆம் ஆண்டு முதல் 5 ஆயிரத்து 245 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதிகபட்சமாக 2017 – 18ஆம் ஆண்டில் ஆயிரத்து 313 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.