தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக, மத்திய அரசுக்கு நிலுவைத் தொகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. கடந்த மாதம் 23ம் தேதி தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அலைக்கற்றை உட்பட பல்வேறு சேவைகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வோடாபோன் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இந்நிலையில், வரும் 20ம் தேதி ஏர்டெல் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்துவதாக அறிவித்துள்ளது.