ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு

ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் வகையில், வன்முறையில் ஈடுபடும் மற்றும் இளைஞர்களைத் தூண்டி விடும் பல்வேறு குழுக்களை கண்காணிக்க சிறப்பு படையை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அமைத்துள்ளது.

250 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்திற்கு 2ஜி தொலைத்தொடர்பு சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்து கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்த ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்ய உள்ளது.

Exit mobile version