மத்திய அரசு பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மத்திய அரசு, பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என, மு.க.ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கற்பனை கலந்த கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, உண்மைக்கு மாறான அறிக்கைகளை வெளியிட்டு வருவது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு, பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்று விளக்கமளிததுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் உண்மையை திரித்து அரசியல் செய்வது வியப்பாக உள்ளது எனவும் அமைச்சர் விமர்சித்துள்ளார். தடைகளைத் தகர்த்து, தமிழக மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையோடு பாரத் நெட் திட்டத்தை, தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டும் என உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக மக்களின் உயிரை பாதுகாக்க தமிழக அரசு எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டுவதற்குப் பதிலாக, உண்மைக்குமாறான அறிக்கை வெளியிடுவதை எதிர்க்கட்சித் தலைவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version