வரும் 8 மற்றும் 9 தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மீறி ஈடுபட்டால் சம்பள பிடித்தம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.