மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மூன்று சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 3 சதவிகித உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 9 சதவிகிதமாக இருந்த நிலையில், 3 சதவிகிதத்துடன் சேர்த்து, 12 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் அவசர சட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஆர்.ஆர்.டி.எஸ் புதிய போக்குவரத்து திட்டத்துக்கு 30 ஆயிரத்து 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.