நிதிப்பற்றாக்குறை காரணமாக 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு

நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த வானொலி நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் செய்திகள் சென்று சேரவேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட இந்த வானொலி நிலையங்கள் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Exit mobile version