புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறையானது, அண்மையில் தேசிய கல்விக்கொள்கையின் வரைவை வெளியிட்டது. இந்த வரைவு கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கருத்து தெரிவிப்பதற்கு கடந்த ஜூன் 30ஆம் தேதி, கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பின்னர், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதுதொடர்பாக மத்திய மனிதவளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநில முதலமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.