நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது மத்திய அரசு

நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த மத்திய அரசு, புதிய பாஸ்போர்ட் கேட்டு தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் நிராகரித்தது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த 2 சிறுமிகள் காணாமல்போனதாக அவர்களது தந்தை ஜனார்த்தன ஷர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக குஜராத் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் தனிநாடு அமைக்க நித்தியானந்தா முயற்சிப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ஈக்குவடார் அரசு மறுத்துவிட்டது. சாமியார் நித்தியானந்தா, தங்களிடம் புகலிடம் கேட்டு அணுகியதை தங்கள் நாடு மறுத்துவிட்டதாகவும், தற்போது நித்தியானந்தா ஈக்குவடாரை விட்டு வெளியேறி ஹைதி நாட்டுக்கு சென்றுவிட்டார் என்றும் ஈக்குவடார் தூதரகம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பியது. இந்நிலையில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் புதிய பாஸ்போர்ட் கேட்டு தாக்கல் செய்த அவரது விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version