பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 புள்ளி 29 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க 5 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பொருளாதார மந்த நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். அப்போது பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனின் 53 புள்ளி 29 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறினார். அதே போல், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இவ்விரு நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.