இந்திய சட்ட விதிகளை ட்விட்டர் நிறுவனம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதி தொடர்பாக அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதிய தகவல் தொழில் நுட்ப விதிகளின்படி, ட்விட்டரில் கருத்து தெரிவிப்போர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், தனது பயனர்களின் தகவலை மத்திய அரசு கண்காணிக்க முடியும் என்பதால், இது தனி நபர் சுதந்திரத்துக்கு எதிரானது என ட்விட்டர் நிறுவனம் கூறிவருவதோடு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மண்ணின் உயரிய தன்மை சட்டத்துக்குத்தான் உள்ளது என்றும் அதை, ட்விட்டர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். இது, ட்விட்டர் நிறுவனத்துக்கு விடப்பட்டிருக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
செய்தியை காட்சிகளுடன் கேட்டறிய..