பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் மோசமான பாதிப்பை சந்தித்ததாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
நிதிவிவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகளை வாங்க முடியாத நிலைக்கும், விளைப்பொருட்களுக்கு உரம், மருந்துக்களை வாங்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கரையானை அழிக்க நாம் விஷம் கலந்த பூச்சி மருந்தை பயன்படுத்துகிறோம், அதே போலதான், நாட்டிலிருந்து ஊழல் என்னும் நோயை ஒழிக்க கசப்பு மருந்ததாக பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை பயன்படுத்தினேன் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடி கசப்பு மருந்து என்று கூறியநிலையில்தான், மத்திய அரசின் அறிக்கையில், விவசாயிகள் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.