தமிழகத்துக்கு மத்திய குழு இன்று வருகை கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, 5 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், 3 நாள் பயணமாக மத்தியக் குழுவினர் தமிழகம் வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபடும் மத்தியக் குழுவினர், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களையும் பார்வையிடுகின்றனர். 3 நாட்கள் ஆய்வுக்கு பின்னர், வரும் 10ம் தேதி அவர்கள் மீண்டும் டெல்லி திரும்புகின்றனர்.

Exit mobile version