நாகை,காரைக்கால் பகுதிகளில் மத்தியக் குழு இன்று இறுதிகட்ட ஆய்வு

கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர், இறுதிகட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிடுகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது இழப்புகள் குறித்து கேட்டறிந்தனர். சேதமடைந்த விவசாய நிலங்கள், தோப்புகள், மீனவர்களின் படகுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம் வந்த மத்தியக் குழுவினர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில் மத்திய குழுவின் இறுதிகட்ட ஆய்வான இன்று, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, காமேஸ்வரம், புதுப்பள்ளி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புயல் சேதங்களை கணக்கிட உள்ளனர்.

 

Exit mobile version