மத்திய ஆயுத படையினரின் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய ஆயுத படையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பனியாற்றுபவர்களின் ஓய்வு வயது ஒவ்வொரு பிரிவுக்கும் வேறுபட்டதாக இருந்தது. இது படை வீரர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அரசியலமைப்புக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த, டெல்லி உயர் நீதிமன்றம் ஓய்வு பெறும் வயதை வரைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, வீரர்கள் ஓய்வு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. இந்நிலையில், மத்திய ஆயுத போலீஸ் படையினர் அனைவருக்கும் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.