மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார்.  8ஆம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அளிப்பதில் குறைபாடு  ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம்,  தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து,  விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Exit mobile version