விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நில எடுப்பு விவகாரத்தில், நிலம், வீடுகளை கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். நிலம் கொடுத்த ஒரு சிலரிடம் ஆசை வார்த்தை பேசி, பணமும், வேலையும் வழங்கியதுடன், விவசாயிகளின் ஒற்றுமையை கலைத்து, தங்களதுப் பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயல் கண்டத்திற்குரியது என எம்எல்ஏ அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார். என்எல்சி சுரங்கப் பணிகளால், நிலத்தடி நீர் அகல பாதாளத்திற்கு சென்று விட்டதுடன், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி, சொந்த ஊரிலே அகதிகளாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், விவசாயிகள் ஆதரவோடு, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எச்சரித்துள்ளார்.

Exit mobile version