இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி! வேடிக்கைப் பார்க்கும் விடியா அரசு!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் 2வது சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக கால்வாய் அமைக்கும் பணிகள், விளை நிலங்களுக்கு நடுவே நடைபெறுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையையும், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும், கையகப்படுத்தப்படும் நிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு என்.எல்.சி நிர்வாகம் உதவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல முறை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில், நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி என்.எல்.சி.நிர்வாகத்தை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் திமுக அரசையும் கடுமையாக கண்டித்து இருக்கிறார். மேலும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம், மாநிலங்களவையில் என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், விடியா திமுக அரசு மீதும் என்.எல்.சி.நிர்வாகத்தின் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள் இனி எப்படி இவர்களை நம்பி இருப்பது என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர்… ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இதுவரை வாய் திறக்காமல் மௌனித்து கிடப்பதால், விவசாயிகள் என்.எல்.சி நிர்வாகத்தையும் திமுக அரசையும் எதிர்த்து களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…

விவசாயிகளுக்காக நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம் என்று திருச்சியில் நீட்டி முழங்கிய ஸ்டாலின், என்.எல்.சி நிர்வாகத்திற்கு துணையாக காவல்துறையை அனுப்பி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி இருப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது….

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது நாங்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைப்போம் என்று பேசிய ஸ்டாலின், இன்றைக்கு என்.எல்.சி விவகாரம் குறித்து அவரது கட்சி எம்.பிக்களை வைத்து ஏன் எந்த நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை? மணிப்பூர் விவகாரத்திற்காக போராடும் திமுகவின் எம்பிக்கள் நம்ம ஊர் பிரச்சனையைப் பற்றி ஏன் வாய் திறக்க வில்லை?

விவசாயிகளின் வயிற்றில் அடித்து நிலங்களை தோண்டும் என்.எல்.சி. நிர்வாகத்தை தடுப்பது யார்?

இனியாவது விவசாயிகளின் கூக்குரலுக்கு திமுக அரசு செவி சாய்க்குமா?

விவசாயிகளின் வயிற்றில் அடித்து நிலங்களை தோண்டும் என்.எல்.சி. நிர்வாகத்தை தடுப்பது யார்? இனியாவது விவசாயிகளின் கூக்குரலுக்கு திமுக அரசு செவி சாய்க்குமா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டிய திமுக எம்.பிக்கள் 39 பேர் வாய் மூடி மௌனித்து இருப்பது ஏன்? என பல்வேறு கேள்விகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

Exit mobile version