தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மத்திய மண்டல நூற்றாண்டு விழா

7வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு, தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மத்திய மண்டல நூற்றாண்டு விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மத்திய மண்டலத்தின் நூற்றாண்டு விழா, அதன் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தலைமையில், தஞ்சையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், 15 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

Exit mobile version