காஷ்மீரில் 72 நாட்களுக்குப் பிறகு செல்போன் சேவை மீண்டும் தொடக்கம்

72 நாட்களுக்குப் பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்களை உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்துப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாகவும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. செல்போன்கள், இணையதள சேவைகள் முடங்கின. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் 72 நாட்களுக்குப் பிறகு செல்போன் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பள்ளத்தாக்கு பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் விலக்கப்பட்ட நிலையில் தற்போது செல்போன் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version