செல்போன், டிவியை 20ம் தேதி முதல் ஆன்லைனில் ஆர்டர் பண்ணலாம்

செல்போன், டீவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை வரும் 20ம் தேதி முதல் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, வரும் 20ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இந்த நிலையில், செல்போன், டீவி, ஃபிரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை வரும் 20 ஆம் தேதி முதல் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப் டீல் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே போன்று, ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்யும் வாகனங்களை இயக்கவும், லாரி உள்ளிட்ட வாகன பழுதுநீக்கும் கடைகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version