மோடி, ரஜினியை தொடர்ந்து Man vs Wild-ல் இணையும் பிரபலங்கள்

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man vs Wild  நிகழ்ச்சியில் அடுத்ததாக இணையும் பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் புகழ்பெற்றது Man vs Wild . அடர்ந்த காட்டிற்குள் சென்று அங்கு நிலவும் சவால்களை எதிர்கொள்வதே இதன் நோக்கமாகும். பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது.  

முன்னாள் அமெரிக்கா அதிபர் ஓபாமா, பிரதமர் மோடியை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து இந்தியாவின் பல முக்கிய பிரபலங்களை பங்கெடுக்க வைக்கும் முயற்சியில் Man vs Wild  குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் பாலிவுட் பிரபலங்களான நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை தீபிகா படுகோனே, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் Man vs Wild  நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகின.

தொடர்ந்து இந்திய பிரபலங்கள் கலந்து கொள்ளும் Man vs Wild   நிகழ்ச்சியால் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version