ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்வின் போது அருள்மிகு அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இராம.. இராம.. என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுற்றி நின்று கண்டுகளித்தனர். ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வரும் 4 ஆம் தேதி தபசுமண்டகப்படியும், 5 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.