இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் கோலாகலக் கொண்டாட்டம்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்ச்சிகள் கொழும்புவில் கோலாகலமாக நடைபெற்றது.

அதிபர் சிரிசேன தேசிய கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு விருந்தினராக, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி கலந்துகொண்டார். ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள், விமானப் படைவீரர்கள், சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் தேசிய இளைஞர் படையினர் சுதந்திர தின மரியாதை அணிவகுப்பில் கலந்து சிறப்பித்தனர். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Exit mobile version