கோத்தகிரியில் கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி கோத்தரின மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆதிவாசி பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலில் கம்பட்டராயர் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து தீபம் ஏற்றி கம்பட்டராயரை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலின் முன்புறம் உள்ள நடுகல்லைச் சுற்றித் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதனை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.