மருத்துவமனை தின விழாக-முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்தநாள் விழாவை மருத்துவமனை தின விழாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா கோலாகலமாக நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை கண்காட்சியினை மாவட்ட இணை இயக்குனர் ரமாமணி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் முத்துலட்சுமி அம்மையாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. சீர்வரிசை தட்டும் வழங்கப்பட்டது. மருத்துவமனை தினத்தை கொண்டாட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version