காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ள சியட் நிறுவன தொழிற்சாலையின் உற்பத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாகவும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாகவும் பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, தமிழக அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சியட் நிறுவனத்தின் டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையின் டயர் உற்பத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.