சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் 50% குற்றங்கள் குறைந்துள்ளன

சென்னை நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதால், 50 சதவீத குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தர். தேனாம்பேட்டை, சீதா அம்மாள் பிரதான சாலை பகுதியில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு கேமரா என்ற அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி இருப்பதாகவும், 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறினார்.

குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து இருப்பதை சுட்டிக் காட்டிய காவல்துறை ஆணையர், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கேமராக்களை பொருத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version