மதுபான கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் மதுபான கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. இந்நிலையில் மதுபான கடைகளில் ரகளையில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் 38 இடங்களிலும் மண்டல அளவில் 5 இடங்களிலும் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் கோரியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பத்தை வரும் மார்ச் 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மதுபான விற்பனையை முறைப்படுத்துவதுடன் 18 வயத்திற்குட்பட்ட சிறுவர்கள் மது வாங்குவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version