சிசிடிவி கேமராக்கள் மூலம் மாநகரில் குற்றங்கள் குறைந்துள்ளது – காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் சென்னை மாநகரத்தில் குற்றங்கள் பெரும் அளவில் குறைந்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக ராயபுரம்முதல் எண்ணூர் விரைவுசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 25 கி.மீ. தூரத்திற்கு 998 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கிவைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல்வேறு இடங்களில் 3ம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச்சம்பவங்களை கண்டுபிடிப்பது எளிதாக உள்ளதாகவும், மாநகரில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version