பெரும்பாலான குற்றச் சம்பவங்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது என, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும் வேண்டி, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அங்குள்ள காவல்நிலையத்திலும், புதிதாக கட்டப்பட்ட டென்னிஸ் விளையாட்டு மைதானத்திலும், ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாட்டை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.