சிசிடிவி கேமராவால் 50% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது: சென்னை காவல் ஆணையர்

வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் ANPR சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறநகர் காவல் நிலையத்தையும், புதிதாக பொருத்தப்பட்ட 209 சிசிடிவி கேமராக்களையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக வாகன எண்ணை துல்லியமாக பதிவு செய்யும் ANPR சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறகாவல் நிலையத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை கால்வாய் பகுதி, சாய்பாபா கோவில் மற்றும் அக்கரை பகுதி முதல் முட்டுகாடு பகுதி வரையும் புதிதாக பொருத்தப்பட்ட 209 சிசிடிவி கேமராக்கள் மற்றும் வாகன எண்ணை துல்லியமாக கண்டறியக்கூடிய நவீன சிசிடிவி கேமராக்களையும் அவர் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆணையர் விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்களால் குற்றச் சம்பவங்கள் 50% குறைந்துள்ளதுள்ளதாகவும், குற்றங்களை விரைவாக கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா பெரும் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version