கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கானது எனவும், அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிபிஎஸ்இ 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 30 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கூட்டாட்சி, மதச்சார்பின்மை, குடியுரிமை போன்ற பாடங்கள் நீக்கப்பட்டதற்கு சிலர் அரசியல் நோக்கம் கற்பிப்பதாகவும், உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களிலும் சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தியுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முக்கிய பாடப்பகுதிகள், நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.