சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும்
12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில் ஒத்தி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் விடுபட்ட சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிவதோடு, சானிடைசர் கொண்டு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version